ஜெயிலர் படத்தின் வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அடுத்த படத்திற்கான அப்டேட்டை இன்று வெளியிட்டுள்ளது. ரஜினிகாந்தின் 171வது படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார். அனிருத் இசையமைக்கவிருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், அன்பறிவு மாஸ்டர்கள் சண்டைப் பயிற்சி இயக்குனர்களாக பணியாற்றுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. Read More
Tags : lokesh kanagaraj
மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் உள்ளிட்ட ப்ளாக் பஸ்டர் படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய்யை வைத்து லியோ படத்தினை இயக்கி வருகிறார். லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் புது பி எம் டபிள்யூ கார் ஒன்றை வாங்கியுள்ளார். சுமார் 1.7 கோடி மதிப்பிலான இந்த காரானது பி எம் டபிள்யூ 7 சீரியஸ் வகையைச் சார்ந்ததாகும். இயக்குனர் […]Read More
சில தினங்களுக்கு முன்பு ரசிகர்களை சந்தித்து பேசிய நடிகர் சூர்யா, தனது அடுத்த படங்களின் அப்டேட்டை ரசிகர்களிடையே பகிர்ந்து கொண்டார். தற்போது நடித்து வரும் கங்குவா படத்தின் படப்பிடிப்பை முடித்ததும், சுதா கங்கோரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாகவும், அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடி வாசல் படத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறினார். ரோலக்ஸ் கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாகவும் சூர்யா கூறினார். அதுமட்டுமல்லாமல், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் […]Read More
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த மிகப்பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தின் க்ளைமாக்ஸில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் தோன்றி அனைவரையும் கவர்ந்திருந்தார். இவர் ஏற்று நடித்திருந்த ரோலக்ஸ் என்ற கதாபாத்திரம் அனைவராலும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ஆன்லைனில் தனது ரசிகர்களோடு உரையாடிய சூர்யா, விரைவில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை முன்னிறுத்தி முழு படம் ஒன்று லோகேஷ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக சூர்யா கூறியுள்ளார். இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.Read More
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்க உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “மாமன்னன்”. இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், விமர்சன ரீதியாகவும் நல்லதொரு பேசு பொருளாக மாறியது. இந்நிலையில், இப்படம் தற்போது நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படத்தினை பார்த்த பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை படக்குழுவினருக்கு தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் மாமன்னன் படத்தினை பற்றி […]Read More
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து லியோ என்ற படத்தை உருவாக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.. போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தான் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.. இந்நிலையில், இப்படத்தினை முடித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லியோ படத்தில் எப்படி, விஜய்யை தவிர்த்து பல பெரிய நட்சத்திரங்களை படத்திற்குள் களமிறக்கினாரோ அதே போல், “தலைவர் 171” படத்திலும் 20க்கும் மேற்பட்ட பெரிய நட்சத்திரங்களை களமிறக்க இயக்குனர் […]Read More
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் “லியோ”. படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. காஷ்மீர் படப்பிடிப்பை ஒரே ஷெட்யூலாக முடித்து சென்னை திரும்பியது படக்குழு. சில தினங்களுக்கு முன்பு, விஜய் தனக்கான போர்ஷனை முடிவு செய்தார். இந்நிலையில், இன்று லியோ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். சுமார் 125 நாட்கள் நடைபெற்ற படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றிருக்கிறது. எந்த படத்திற்கும் இல்லாத […]Read More
பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உருவாகி வரும் படம் தான் “தங்கலான்”. சில தினங்களுக்கு முன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்நிலையில், அடுத்த படத்திற்கான பணிகளை துவக்கியிருக்கிறார் நடிகர் விக்ரம். இயக்குனர் லோகேஷ் கனகராஜோடு கைகோர்த்திருக்கிறார் விக்ரம். ஆம், லோகேஷ் கனகராஜின் கதையில் அவரது உதவி இயக்குனர் பால சுப்ரமணியம் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் விக்ரம். இப்படத்தினை, லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் தயாரிக்கவிருக்கிறாராம். விக்ரமின் 62வது படமாக இப்படம் உருவாக இருக்கிறது. படத்தினை பற்றிய […]Read More
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் “லியோ”. காஷ்மீரில் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு, சென்னையை முகாமிட்டு படப்பிடிப்பை நடத்தி வந்தது. இந்நிலையில், படக்குழுவினர் மீண்டும் காஷ்மீர் பறந்திருக்கின்றனர். முக்கியமான பிரபலம் ஒருவரை அழைத்துக் கொண்டு காஷ்மீர் பறந்திருக்கிறது இக்குழு. பிரபல இயக்குனரான அனுராக் காஷ்யப் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாராம். அவர் நடிக்கும் காட்சியை படமாக்குவதற்குத் தான், படக்குழு அங்கு விரைந்துள்ளதாம். விரைவில், […]Read More
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் “லியோ”. படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடினார். படக்குழுவினர், பிறந்தநாள் பரிசாக ரசிகர்களுக்காக “லியோ” படத்தின் பாடல் ஒன்றை வெளியிட்டனர். பாடல் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து யூடியூபில் சாதனையும் படைத்து வருகிறது. இந்நிலையில், இப்பாடலானது போதைப்பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையில் இருப்பதாக சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் ஆர்டிஐ […]Read More