Tags : lokesh kanagaraj

News Tamil News

லோகேஷ் இயக்கத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்கள்; சூர்யா

சில தினங்களுக்கு முன்பு ரசிகர்களை சந்தித்து பேசிய நடிகர் சூர்யா, தனது அடுத்த படங்களின் அப்டேட்டை ரசிகர்களிடையே பகிர்ந்து கொண்டார். தற்போது நடித்து வரும் கங்குவா படத்தின் படப்பிடிப்பை முடித்ததும், சுதா கங்கோரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாகவும், அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடி வாசல் படத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறினார். ரோலக்ஸ் கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாகவும் சூர்யா கூறினார். அதுமட்டுமல்லாமல், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் […]Read More

News Tamil News

ரோலக்ஸ் கன்பார்ம்; சூர்யா கொடுத்த மாஸ் அப்டேட்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த மிகப்பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தின் க்ளைமாக்ஸில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் தோன்றி அனைவரையும் கவர்ந்திருந்தார். இவர் ஏற்று நடித்திருந்த ரோலக்ஸ் என்ற கதாபாத்திரம் அனைவராலும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ஆன்லைனில் தனது ரசிகர்களோடு உரையாடிய சூர்யா, விரைவில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை முன்னிறுத்தி முழு படம் ஒன்று லோகேஷ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக சூர்யா கூறியுள்ளார். இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.Read More

News Tamil News

மாமன்னன் படத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்க உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “மாமன்னன்”. இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், விமர்சன ரீதியாகவும் நல்லதொரு பேசு பொருளாக மாறியது. இந்நிலையில், இப்படம் தற்போது நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படத்தினை பார்த்த பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை படக்குழுவினருக்கு தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் மாமன்னன் படத்தினை பற்றி […]Read More

News Tamil News

லியோ” போலவே “தலைவர் 171” படத்தில் சம்பவம்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து லியோ என்ற படத்தை உருவாக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.. போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தான் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.. இந்நிலையில், இப்படத்தினை முடித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லியோ படத்தில் எப்படி, விஜய்யை தவிர்த்து பல பெரிய நட்சத்திரங்களை படத்திற்குள் களமிறக்கினாரோ அதே போல், “தலைவர் 171” படத்திலும் 20க்கும் மேற்பட்ட பெரிய நட்சத்திரங்களை களமிறக்க இயக்குனர் […]Read More

News Tamil News

நிறைவடைந்தது “லியோ”; மகிழ்ச்சியில் படக்குழு!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் “லியோ”. படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. காஷ்மீர் படப்பிடிப்பை ஒரே ஷெட்யூலாக முடித்து சென்னை திரும்பியது படக்குழு. சில தினங்களுக்கு முன்பு, விஜய் தனக்கான போர்ஷனை முடிவு செய்தார். இந்நிலையில், இன்று லியோ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். சுமார் 125 நாட்கள் நடைபெற்ற படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றிருக்கிறது. எந்த படத்திற்கும் இல்லாத […]Read More

News Tamil News

விக்ரமோடு இணையும் லோகேஷ் கனகராஜ்!

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உருவாகி வரும் படம் தான் “தங்கலான்”. சில தினங்களுக்கு முன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்நிலையில், அடுத்த படத்திற்கான பணிகளை துவக்கியிருக்கிறார் நடிகர் விக்ரம். இயக்குனர் லோகேஷ் கனகராஜோடு கைகோர்த்திருக்கிறார் விக்ரம். ஆம், லோகேஷ் கனகராஜின் கதையில் அவரது உதவி இயக்குனர் பால சுப்ரமணியம் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் விக்ரம். இப்படத்தினை, லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் தயாரிக்கவிருக்கிறாராம். விக்ரமின் 62வது படமாக இப்படம் உருவாக இருக்கிறது. படத்தினை பற்றிய […]Read More

News Tamil News

மீண்டும் காஷ்மீர் பறந்த “லியோ” படக்குழு… படத்தில்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் “லியோ”. காஷ்மீரில் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு, சென்னையை முகாமிட்டு படப்பிடிப்பை நடத்தி வந்தது. இந்நிலையில், படக்குழுவினர் மீண்டும் காஷ்மீர் பறந்திருக்கின்றனர். முக்கியமான பிரபலம் ஒருவரை அழைத்துக் கொண்டு காஷ்மீர் பறந்திருக்கிறது இக்குழு. பிரபல இயக்குனரான அனுராக் காஷ்யப் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாராம். அவர் நடிக்கும் காட்சியை படமாக்குவதற்குத் தான், படக்குழு அங்கு விரைந்துள்ளதாம். விரைவில், […]Read More

News Tamil News

“நா ரெடி தான்” பாடலுக்காக விஜய் மீது

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் “லியோ”. படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடினார். படக்குழுவினர், பிறந்தநாள் பரிசாக ரசிகர்களுக்காக “லியோ” படத்தின் பாடல் ஒன்றை வெளியிட்டனர். பாடல் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து யூடியூபில் சாதனையும் படைத்து வருகிறது. இந்நிலையில், இப்பாடலானது போதைப்பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையில் இருப்பதாக சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் ஆர்டிஐ […]Read More

News Tamil News

லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் கதை

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடிக்க லியோ படத்தினை இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்கவிருக்கிறார் என்ற செய்தி தற்போது காட்டுத்தீயாக பரவி வருகிறது. ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினைத் தொடர்ந்து ஜெய்பீம் ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தினை முடித்ததும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. […]Read More

News Tamil News

ரஜினி – லோகேஷ் கூட்டணி உறுதி… அடித்து

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வருகிறது “லியோ”. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. தமிழ் சினிமாவின் ட்ரெண்டிங் இயக்குனராக தற்போது வலம் வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இப்படத்தினைத் தொடர்ந்து அடுத்த படம் யாரோடு என்ற கேள்வி கோலிவுட் வட்டாரத்தில் பரபரக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருக்கிறார். ஜெயிலர் படத்தினை முடித்ததும் அடுத்ததாக ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினி. இந்த படத்தை முடித்து, அடுத்ததாக லோகேஷ் […]Read More