சிவகார்த்திகேயன் தற்போது தெலுங்கு பட இயக்குனரோடு பிரின்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவிருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கப்படவிருக்கிறது. இப்படத்தினைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன். இதன் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியில் ஆரம்பிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Tags : prince
டான் படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் தெலுங்கு பட இயக்குனர் அனுதீப் இயக்குனரோடு கைகோர்த்திருக்கிறார். சிவகார்த்திகேயனின் அயலான் படத்தில் கிராபிக்ஸ் பணிகள் அதிகம் என்பதால், அதற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதற்கு முன் அனுதீப் இயக்கத்தில் உருவாகும் படத்தினை வெளியிட திட்டமிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். பெயர் வைக்கப்படாமல் உருவாகி வந்த இப்படத்திற்கு தற்போது “பிரின்ஸ்” என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.மேலும், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ரியா போஸ்கா கதாநாயகியாக […]Read More