Tags : production

News Tamil News

வாரிசு இசை வெளியீட்டு விழா – தயாரிப்பு

தளபதி விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர். அப்போது, ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு அரங்கில் இருந்த இருக்கைகள் பலவற்றை சேதப்படுத்தியுள்ளனர். இந்த சேதம் குறித்த கணக்கெடுப்புக்குப் பின் தயாரிப்பு நிறுவனத்திடம் அபராதம் வசூலிக்கப்படும் என நேரு உள்விளையாட்டு அரங்க பொறுப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியாகியுள்ளது.  Read More

News Tamil News

அடுத்தடுத்து இரண்டு பெரிய படங்கள்… லோகேஷின் அடுத்த

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து படம் இயக்கவிருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அதற்கான ஆரம்பகட்ட பணிகளில் மிகவும் மும்முரமாக இருந்து வருகிறார் லோகேஷ். அதே சமயத்தில், அடுத்தடுத்து இரண்டு படங்களை தயாரிக்கும் பணியிலும் இறங்கியிருக்கிறார் லோகேஷ். அதன்படி சீயான் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குகிறார் லோகேஷின் உதவி இயக்குனர். அடுத்ததாக, ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தை லோகேஷின் நண்பரும் இயக்குனருமான ரத்னகுமார் இயக்கவிருக்கிறார். இந்த இரு படங்களைத் தான் ஒரேகட்டத்தில் […]Read More