Tags : Rajinikanth

News Tamil News

ஆந்திராவில் முகாமிட்டுள்ள வேட்டையன் படக்குழு!

இயக்குனர் ஞானவேல் ராஜா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி வருகிறது வேட்டையன். படம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், படப்பிடிப்பானது தற்போது ஆந்திராவில் நடைபெற்று வருகிறது. இந்த கட்ட படப்பிடிப்பில் பஹத் பாசில், ராணா, ரஜினிகாந்த் நடித்து வருகிறார்கள். விரைவில் படப்பிடிப்பானது முடிவடையும் என்கிறது படக்குழு. அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.Read More

News Tamil News

சூப்பர் ஸ்டாரை இயக்கும் மாரி செல்வராஜ்!

இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது வாழை என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இவர் அடுத்ததாக, துருவ் விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தை முடித்ததும் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்துஒரு படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைவர் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் முடித்ததும், 172வது படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்குவார் என்ற தகவல் கசிந்துள்ளது. மேலும், இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் லலித் தயாரிப்பார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.  Read More

News Tamil News

பிரமாண்ட ஏற்பாட்டில் “லால் சலாம்” இசை வெளியீடு

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் லால் சலாம். இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். லைகா தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பொங்கல் வெளியீடாக இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இதன் இசை வெளியீட்டு விழாவை வரும் 21 ஆம் தேதி சாய் ராம் கல்லூரியில் […]Read More

News Tamil News

முத்துவைத் தொடர்ந்து படையப்பா!?

இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், மீனா நடித்த முத்து திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. தற்போது இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. தொடர்ந்து பல திரையரங்குகளில் ரசிகர்கள் படத்தினை கொண்டாடி வருகின்றனர். இப்படத்தை, ரசிகர்களோடு சென்னை திரையரங்குகளில் கண்டுகளித்தனர் மீனாவும் இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரும். முத்து படத்தின் ரெஸ்பான்ஸைத் தொடர்ந்து படையப்பா படத்தையும் ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  Read More

News Tamil News

படப்பிடிப்பில் சந்தித்துக் கொண்ட ரஜினி & கமல்

ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றும் வரும் அதே இடத்தில், கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. இதனால், இருவரும் நேரில் சந்தித்துக் கொண்டு கட்டிப்பிடித்து தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர். பல வருடங்களுக்குப் பிறகு படப்பிடிப்பில் சந்தித்துக் கொண்டதால் இருவரும் சிரித்து பேசி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்த […]Read More

News Tamil News

திட்டமிட்டபடி பொங்கலுக்கு வெளிவருகிறது “லால் சலாம்”

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உருவாகி வரும் படம் தான் லால் சலாம். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போதிலும், படத்தின் ஒரு சில காட்சிகள் இன்னும் படமாக்கப்பட வேண்டியுள்ளது என்ற தகவல் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இதனால், படக்குழு மீண்டும் பட வெளியீட்டு […]Read More

News Tamil News

சென்னையில் “தலைவர் 170” படப்பிடிப்பு!

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி வரும் படம் தான் “தலைவர் 170”. அதிவேகமாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தில், பஹத் பாசில், ராணா, அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில், தென் தமிழகத்தில் நடைபெற்று வந்த படபிடிப்பானது, தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னை பிரசாத் லேப் அரங்கில் மிக பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.  Read More

News Tamil News

அனல் பறக்கும் “லால் சலாம்” டீசர்!

லைகா நிறுவன தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் லால் சலாம். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் தீபாவளி தினமான நேற்று வெளியானது. ஏ ஆர் ரகுமானின் இசையில், விஷ்ணு விஷால், விக்ராந்த் மட்டுமல்லாது சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். ரஜினிகாந்தின் மிரள வைக்கும் நடிப்பில் வெளிவந்துள்ள இந்த டீசர் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. வரும் பொங்கல் தினத்தை […]Read More

News Tamil News

ரஜினியின் “ஜெயிலர் 2” உறுதி!?

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி சில நாட்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் “ஜெயிலர்”. இப்படம் சுமார் 650 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. இந்நிலையில், ரஜினி தனது அடுத்த படமான “தலைவர் 170” படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அதற்கு அடுத்த படமாக மீண்டும் நெல்சனை வைத்து ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க […]Read More

News Tamil News

லியோ” வெற்றி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் –

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பானது திருநெல்வேலி பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு குஜராத் சென்று இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டைக் கண்டு களித்தார். இந்நிலையில், மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக திருநெல்வேலி செல்வதற்காக தூத்துக்குடி விமான நிலையத்தில் வந்திறங்கினார் ரஜினிகாந்த். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், “ லியோ படம் வெற்றி பெற இறைவனைப் […]Read More