Tags : red giant

News Tamil News

சிங்கப்பூர் சலூனை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட்

ரெளத்திரம், காஷ்மோரா, ஜூங்கா உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் அடுத்ததாக சிங்கப்பூர் சலூன் என்ற படத்தினை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் லால், சத்யராஜ், ஆர் ஜே பாலாஜி நடித்திருக்கிறார்கள். படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தின் தமிழ்நாடு தியேட்டர் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியிருக்கிறது ரெட் ஜெயண்ட் நிறுவனம். இம்மாதம் 25ஆம் தேதி படம் திரைக்கு வரும் எனவும் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.Read More

News Tamil News

லால் சலாம் படத்தைக் கைப்பற்றிய ரெட் ஜெயண்ட்

ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “லால் சலாம்”. இப்படத்தில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஏ ஆர் ரகுமான். லைகா தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம், வரும் பொங்கல் தினத்தன்று வெளியாக இருக்கிறது. இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  Read More

News Tamil News

திரைத்துறையில் ஒற்றுமை இல்லை – உதயநிதி ஸ்டாலின்

தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் மகனும், அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று தென்னிந்திய திரைப்பட கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், “ திரைத்துறையில் இருப்பவர்களுக்கிடையே ஒற்றுமை இல்லை. அவர்களிடம் ஒற்றுமை இருந்தால் மட்டுமே திரைத்துறை அடுத்த இடத்திற்கு முன்னேறும். ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு 2000 கோடி சொத்து உள்ளதாக அண்ணாமலை கூறியிருக்கிறார். அது உண்மையல்ல. திரைத்துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமே அதன் மதிப்பு தெரியும். தமிழ்நாடு அரசு திரைப்படத்துறையின் வளர்ச்சிக்கு பல்வேறு […]Read More

News Tamil News

உதயநிதி இடத்தில் இனி கிருத்திகா உதயநிதி தான்!?

தமிழக சினிமாவில் சில வருடங்களாக உதயநிதி ஸ்டாலினி ரெட் ஜெயண்ட் நிறுவனம் அநேக படங்களை தமிழக உரிமையை பெற்று ரிலீஸ் செய்து வருகிறது. இதில் பல ப்ளாக் பஸ்டர் படங்களும் உள்ளடக்கம். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் சட்டமன்ற உறுப்பினராக இருந்த உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இதனால், சினிமாவிற்கு முழுக்கு போட்டு, முழு நேர அரசியலில் தற்போது இறங்கியுள்ளார்., இதனைத் தொடர்ந்து தனது ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் நிர்வாக பொறுப்பு முழுவதையும் தனது மனைவி […]Read More

News Tamil News

ரெட் ஜெயண்ட் நிறுவனத்தால் கிடைத்த 1200 கோடி!!

தமிழ் சினிமாவில் அசைக்க முடியா விநியோக நிறுவனமாக மாறியிருக்கிறது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம். இந்நிறுவனம் தொடர்ந்து பல படங்களை தமிழகம் முழுவதும் வெளியிட்டு வருகிறது. தயாரிப்பாளர்களுக்கும் உடனுக்குடன் அதற்கான ஷேர் கிடைத்துவிடுவதாகவும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் அதிகப்படியான படங்களை வெளியிடுவது மகிழ்ச்சி தான் என்றும் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஓராண்டில் இவர் வெளியிட்ட படங்கள் மொத்தமாக ரூ.1200 கோடிக்கு மேல் லாபம் பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லாபத்தில் இருந்து பத்து […]Read More

News Tamil News

பிப்ரவரி மாதத்திற்கு தள்ளிச் சென்ற தனுஷின் “வாத்தி”

நடிகர் தனுஷ் நடிக்க தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘வாத்தி’. நாயகியாக சம்யுக்தா நடித்துள்ளார். ஜி வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன் இப்படத்தின் பாடலான வா வாத்தி என்ற பாடல் ஹிட் அடித்துள்ளது. வாத்தி படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. நேரடியாக தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் உருவாகியுள்ள […]Read More

News Tamil News

பிரம்மாண்ட படத்தை கையில் எடுக்கும் சுந்தர் சி!

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் காபி வித் காதல். இப்படத்தினைத் தொடர்ந்து தனது கனவு படத்தை கையில் எடுத்துள்ளார் சுந்தர் சி. ஆம், 2018 ஆம் வருஷம் ஆர்யா மற்றும் ஜெயம் ரவியை வைத்து பிரம்மாண்ட வரலாற்று நாவலான சங்கமித்ரா படத்தை இயக்க சுந்தர் சி முடிவு செய்திருந்தார். மேலும் இப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் அந்தப் படம் அப்போதே தடைபட்டு நின்று […]Read More

News Tamil News

விக்ரம் படத்தை தொடர்ந்து அடுத்த படத்தைக் கைப்பற்றிய

ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவான திரைப்படம் தான் “விக்ரம்”. இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றி தமிழ்நாடு முழுவதும் வெளியிட்டது. படம் வெளியாகி 12 நாட்களுக்கு மேலாகியும் அரங்குகளில் இன்னமும் கூட்டம் குறையாது, ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. வசூலையும் வாரிக் குவித்து வருகிறது. அனைத்து பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்டை விக்ரம் படம் முறியடிக்கும் என உதயநிதி ஸ்டாலின் சில தினங்களுக்கு முன் கூட தெரிவித்திருந்தார். இந்நிலையில், […]Read More

News Tamil News

கேப்டனையும் தட்டி தூக்கிய ரெட் ஜெயண்ட்.. மாஸ்

டெடி படத்திற்கு பிறகு ஆர்யாவும் இயக்குனர் சக்தி செளந்தர்ராஜனும் இணைந்து உருவாகியிருக்கும் படம் “கேப்டன்”. இப்படத்தில் ஐஸ்வர்யலட்சுமி, சிம்ரன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து போஸ் ப்ரொடக்‌ஷன் பணிகள் துவங்கி உள்ளன. இந்நிலையில் இந்த படத்தின் தமிழக தியேட்டரிக்கல் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. தொடர்ந்து பல பெரிய படங்களை மட்டுமே வெளியிட்டு வரும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கேப்டன் படத்தையும் கைப்பற்றியிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் […]Read More