Tags : release date

News Tamil News

வேட்டையனோடு மோதத் தயங்கும் “கங்குவா”.. ரிலீஸ் தேதி

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கும் படம் தான் கங்குவா. படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வரும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க உருவாகியிருக்கும் வேட்டையன் திரைப்படமும் அதே அக்டோபர் மாதம் 10ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவித்திருக்கிறது படக்குழு. ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் மிகப்பெரும் ஹிட் அடித்திருப்பதால், வேட்டையன் படத்தோடு நாம் மோத வேண்டுமா என்ற […]Read More

News Tamil News

நாள் குறித்த வேட்டையன்; தள்ளிச் செல்லும் கங்குவா

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க லைகா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் வேட்டையன். படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது., அதே தேதியில் சூர்யா நடித்த கங்குவா படம் வெளியாகும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டிருந்தது. வேட்டையன் படத்தோடு மோத விரும்பாமல், ரிலீஸ் தேதியை கங்குவா படக்குழு தள்ளி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  Read More

News Tamil News

ஆகஸ்ட் 15ல் திரைக்கு வருகிறது “தங்கலான்”

பா ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் தங்கலான். படத்தின் படப்பிடிப்பானது ஏற்கனவே முடிவடைந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விக்ரம் நடிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் நல்லதொரு வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை நேற்றுபடக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அதன்படி, வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் […]Read More

News Tamil News

ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரும் “தங்கலான்”

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உருவாகி வரும் படம் தான் தங்கலான். படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், படம் ரிலீஸ் எப்போது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தினை ஆஸ்கர் கொண்டு செல்லவும் படக்குழு திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில், படத்தினை வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி திரைக்குக் கொண்டு வர தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா திட்டமிட்டிருக்கிறாராம். இன்று […]Read More

News Tamil News

ரிலீஸ் தேதி குறித்த ராயன்… எதிர்பார்ப்பில் தனுஷ்

நடிகர் தனுஷ் நடித்து இயக்கியிருக்கும் படம் தான் ராயன். இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில், எஸ் ஜே சூர்யா, சுந்தீப், துஷாரா, வரலக்‌ஷ்மி, அபர்ணா, காளிதாஸ் மற்றும் அனிகா நடித்திருக்கின்றனர். படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஏ ஆர் ரகுமான். தயாரித்திருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது.. இந்நிலையில், படத்தினை அடுத்த மாதம் 26ஆம் தேதி திரைக்குக் கொண்டு […]Read More

News Tamil News

தீபாவளிக்கு வெளியாகும் “விடுதலை 2”

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் விடுதலை. இப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்ற நிலையில், இதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இறுதிகட்டத்தை எட்டியுள்ள இதன் படப்பிடிப்பு விரைவில் முடிவுபெற இருக்கிறது. இந்நிலையில், படத்தினை வரும் தீபாவளிக்கு திரைக்குக் கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  Read More

News Tamil News

செப்டம்பரில் திரைக்கு வரும் சிவகார்த்திகேயனின் “அமரன்”

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உருவாகி வருகிறது அமரன். இப்படத்தினை உலகநாயகன் கமல்ஹாசன் தயாரித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பானது முடிவடைந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தினை வரும் செப்டம்பர் மாதம் இறுதியில் திரைக்குக் கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தினை மிகப்பெரும் அளவில் ப்ரொமோட் செய்து, சி செண்டர் பார்வையாளர்கள் வரை படத்தினை கொண்டு செல்ல திட்டமிட்டிருக்கிறது படக்குழு. அதற்கான பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.Read More

News Tamil News

மே 31ல் களமிறங்கும் கருடன்

இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் இவர்களது நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் கருடன். கதையின் நாயகனாக இப்படத்தில் சூரி நடித்திருக்கிறார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கலந்த கிராமத்து பாணியில் படம் உருவாகியிருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படத்தின் டைட்டில் க்ளிம்ப்ஸ் வெளியாகி அனைவரிடமும் நல்லதொரு வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின்மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வரும் 31ஆம் தேதி இப்படத்தினை திரைக்குக் கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளனர்..Read More

News Tamil News

மே 10 அன்று ரிலீஸாகும் சாந்தகுமாரின் “ரசவாதி”

மெளனகுரு, மகாமுனி படங்களின் இயக்குனரான சாந்தகுமார் அடுத்ததாக ரசவாதி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தின் தயாரிப்பாளரும் இவரே. இந்த படத்தில் அர்ஜுன் தாஸ், தன்யா ரவிச்சந்திரன், ரம்யா, ஜி எம் சுந்தர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. வரும் மே மாதம் 10 ஆம் தேதி இப்படத்தினை திரைக்குக் கொண்டு வர படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சாந்தகுமாரின் இயக்கத்தில் வெளிவந்த இரண்டு படங்களுமே மக்களால் பெரிதும் […]Read More

News Tamil News

ஜூலை 2வது வாரத்தில் தனுஷின் ராயன்

தனுஷ் நடித்து இயக்கி வரும் படம் தான் ராயன். படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் முதல் பாடலானது வரும் மே மாதம் 2ஆம் வாரத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இப்பாடலை தனுஷ் பாடியிருப்பதாகவும் பிரபுதேவா நடன இயக்குனராக பணி புரிந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், படத்தினை வரும் ஜூலை 2ஆம் வாரத்தில் திரைக்குக் கொண்டு வர படக்குழு […]Read More