Tags : tamizh

News Tamil News

கார்த்தியின் அடுத்த படத்தை இவர் தான் இயக்கப்போகிறார்!

நடிகர் கார்த்தி கைவசம் சர்தார், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட சில படங்களை வைத்திருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்து வரும் கார்த்தி, ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை டாணாக்காரன் படத்தை இயக்கிய தமிழ் இயக்கவிருக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பையும் துவங்கவிருக்கிறார்கள். ஏற்கனவே ட்ரீம் வாரியர் நிறுவனத்திற்காகத் தான், டாணாக்காரன் படத்தினை இயக்கியிருந்தார் தமிழ் என்பது குறிப்பிடத்தக்கது.  Read More