2023 தீபாவளியை வேட்டையாட காத்திருக்கும் “தளபதி 67”

 2023 தீபாவளியை வேட்டையாட காத்திருக்கும் “தளபதி 67”

தளபதி விஜய் நடிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானதில் இருந்து பெரும் அளவிற்கு எதிர்பார்ப்பு எகிற வைத்திருக்கிறது.

படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சென்னை படப்பிடிப்பை கச்சிதமாக நடத்தி முடித்திருக்கிறது படக்குழு.

இந்நிலையில், படக்குழுவினர் அனைவரும் காஷ்மீருக்கு தனி விமானத்தில் பறந்திருக்கின்றனர்.

சுமார் ஒரு மாத காலம் அங்கு தான் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம். அதுமட்டுமல்லாமல், அதன் தொடர்ச்சியாக மூணார் பகுதியில் படப்பிடிப்பை நடத்தவிருக்கிறார்கள் படக்குழுவினர்.

இந்த இரண்டு பகுதிகளில் 90 சதவீத படப்பிடிப்பை முடிக்கவிருக்கிறார்களாம. அதன்பிறகு சிறிய பேச் வேலைகள் மட்டுமே இருக்கும் என்கிறார்கள் படக்குழுவினருக்கு நெருங்கிய நண்பர்கள்.

ஆக, விரைவாக படப்பிடிப்பை முடித்து இந்த வருட தீபாவளிக்கு படத்தினை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

அஜித் நடிக்க விரைவில் உருவாகவிருக்கும் ஏகே 62 படத்தின் இயக்குனர் இன்னமும் இறுதி செய்யப்படாத நிலையில், இனி அறிவிப்பு வெளியிடப்பட்டு அதன்பிறகு படப்பிடிப்பு நடத்தப்பட்டு காலம் எடுத்துக் கொள்ளும் என்பதால், அடுத்த வருட பொங்கல் தினத்திற்கு தான் படம் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆகவே, வரும் தீபாவளியை தளபதி விஜய் தனியாக நின்று வசூல் வேட்டையில் சீறுவார் என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.

 

Related post