ஓடிடி பக்கம் சென்ற தமிழ் ராக்கர்ஸ்!

 ஓடிடி பக்கம் சென்ற தமிழ் ராக்கர்ஸ்!

அருண் விஜய் நடிக்க அறிவழகன் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது தமிழ் ராக்கர்ஸ். இது ஒரு வலை தொடராக சோனி லைவ்வில் வெளிவர இருக்கிறது.

வானி போஜன் மற்றும் ஐஸ்வர்யா மேனன் கதாநாயகிகளாக நடித்திருக்கின்றனர். மிகப்பெரும் ஏவிஎம் நிறுவனம் இந்த வலை தொடரை தயாரித்திருக்கிறது.

இன்று காலை இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதன் டீசர் நாளை வெளிவரும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விரைவில், இத்தொடரின் வெளிவரும் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related post