நடிகர் அஜித்குமாரின் தந்தை மரணம்…. இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்!

 நடிகர் அஜித்குமாரின் தந்தை மரணம்…. இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்!

நடிகர் அஜித்குமார் தனது 62வது படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் மிகவும் மும்முரமாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், இன்று அதிகாலை அஜித்குமாரின் தந்தையான சுப்ரமணியம் இயற்கை மரணம் அடைந்தார்.

அஜித்தின் தந்தை பெயர் சுப்ரமணியம். சுப்ரமணியத்திற்கு மொத்தம் மூன்று மகன்கள். அவர்களில் அஜித்குமார் இரண்டாவது மகன் ஆவார். மற்ற இரண்டு மகன்கள் அனில் குமார் மற்றும் அனுப் குமார்.

சுப்ரமணியம் அஜித்தின் பெசண்ட் நகர் வீட்டில் வசித்து வந்தார். வயோதிகம் காரணமாகவும், பக்கவாத நோயாலும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு முழு ஓய்வில் இருந்தார் சுப்ரமணியம். இந்தச் சூழலில் இன்று காலை அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அஜித் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

 

Spread the love

Related post

You cannot copy content of this page