Teddy – திரைப்படம் விமர்சனம்

 Teddy – திரைப்படம் விமர்சனம்

டெடி – திருமணத்திற்கு பிறகு ஆர்யா மற்றும் சயீஷாவின் நடிப்பில் வந்திருக்கும் டிக் டிக் டிக் புகழ் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் வெளியாகியிருக்கும் படம் தான் டெடி.படத்தின் கதை சயீஷாவை முதல் காட்சியிலேயே அவரை கொல்லாமல் அவரின் உடலை மட்டும் கைப்பற்றி கடத்துகிறது ஒரு மருத்துவமனை, இதில் அவர் உடலில் இருந்து வெளியேறும் அவரின் ஆன்மா ஒரு டெடி பொம்மைக்குள் சென்று விடுகிறது. பின்பு அந்த பொம்மைக்குள் மாட்டிக்கொண்டதை அறிந்த சயீஷா அறிவாளியான ஆர்யாவை சந்திக்கிறார்.பின்பு அவரிடம் தனக்கு உதவி செய்யும்படி கேட்கிறார்,இதனால் ஆர்யாவும் சயீஷாவிற்கு உதவி செய்கிறார். இதை கண்டுபிடிக்க முயலும் போதுதான் ஆர்யாவிற்கு இதற்கு பின்னால் ஒரு சர்வதேச கும்பல் இருப்பதை அறிகிறார். பின்பு இதற்கு யார் காரணம், சயீஷாவின் உடலை மீட்டர்களா இல்லையா என்பது மீதி கதை.

நாயகன் ஆர்யா அதிபுத்திசாலியான கதாபாத்திரம் அவருக்கு அவ்வளவு கச்சிதமாக பொருந்தி போகிறார்.காதல் காட்சிகளில் உண்மையான காதலை வெளிப்படுத்தி உள்ளார்.சயீஷாவிற்கு முதல் பாதியில் 10 நிமிடமும் இரண்டாம் பாதியில் சில நிமிடங்களே வந்து போகிறார், மற்றபடி படத்தை தூக்கி நிறுத்தி ரசிக வைப்பது டெடி பொம்மையும் அதற்கு குரல் கொடுத்தவரும் தான். படத்தில் காமெடிக்கு சதிஷ் மற்றும் கருணாகரன் உள்ளனர் ஆனால் எடுபடவில்லை. படத்தில் வரும் என் இனிய தனிமையே பாடல் ரசிக்கும்படி உள்ளது, மற்றபடி பின்னணி இசையும் படத்திற்கு உதவி செய்கிறது. இயக்குனர் சக்தி சௌந்தராஜன் என்றாலே புதுமையான படைப்புக்களை தன கதையில் சொல்ல முயிற்சிப்பார் இதற்கு அவரின் முந்தைய படங்களே சாட்சி, இந்த படமும் அதற்கு விதிவிலக்கல்ல. படத்தின் முதல் பாதியில் சற்று விறுவிறுப்பு குறைவு.

டெடி : தாரளமாக பார்க்கலாம்.

Related post