சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் கதை இதுதானாம்.!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 169-வது படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக, பான் இந்தியா படமாக தயாரிக்கவிருக்கிறது.
படத்தின் ப்ரி ப்ரொடக்ஷன் பணிகள் படுவேகமாக நடைபெற்று வருகிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார்.
ரஜினியுடன் சிவராஜ்குமார், ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன் உள்ளிட்டவர்கள் நடிக்கவிருக்கின்றனர்.
இப்படம், ஜெயில் மற்றும் கைதிகள் சம்மந்தப்பட்ட கதையாக உருவாகியுள்ளதால், முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இப்படம் உருவாக இருக்கிறதாம். அதுமட்டுமல்லாமல், இப்படத்திற்கு ஜெயிலர் என டைட்டில் வைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.