தளபதி 66-ல் படையெடுக்கும் பிரபலங்கள்.. மீண்டும் குடும்ப ரசிகர்களை கவர விஜய் திட்டம்.!?

 தளபதி 66-ல் படையெடுக்கும் பிரபலங்கள்.. மீண்டும் குடும்ப ரசிகர்களை கவர விஜய் திட்டம்.!?

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் “தளபதி 66” படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ராஷ்மிகா ஹீரோயினாக நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார்.

இப்படத்தில் தற்போது ஷ்யாம், ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார் என நடிகர்கள் பட்டாளம் குவியத்தொடங்கியிருக்கிறது. இது முழுக்க முழுக்க குடும்ப பாங்கான படமாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடும்பங்களை கவரும் வகையில் நடிப்பை கொடுப்பதில் எப்போதுமே நடிகர் விஜய் கைதேர்ந்தவர். ஆனால், கடைசியாக வந்த ஒரு சில படங்களில் சில படங்களின் கதைகள், ரசிகர்களை பூர்த்தி செய்யும் விதமாக மட்டுமே இருந்து வந்தது.

இதனால், மீண்டும் குடும்பங்களை கவரும் விதமாக நடிக்க இந்த கதையை தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தளபதி விஜய் கேரியரில் இப்படம் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

Related post