தளபதி 67ல் இணைந்த கேரள பிரபலம்

 தளபதி 67ல் இணைந்த கேரள பிரபலம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் “தளபதி 67”. படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது..

இப்படத்தில், இயக்குனர் மிஷ்கின், சஞ்சய் தத், கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலர் இப்படத்தில் நடிக்கவிருக்கின்றனர்.

தொடந்து இன்னும் பல நட்சத்திரங்களும் இப்படத்தில் விரைவில் இணையவிருக்கின்றனர். அனிருத் இசையில் 7 ஸ்கிரீன்ஸ் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது.

இந்த சூழலில் கேரள முன்னணி நடிகர் பஹத் பாசிலும் இப்படத்தில் இணையவிருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை மறுதினம் அதாவது குடியரசு தின விழா அன்று படத்தின் அப்டேட் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love

Related post