தளபதி 67”; அடுத்தடுத்த அப்டேட்களால் அதிர்ந்து போன கோலிவுட்

 தளபதி 67”; அடுத்தடுத்த அப்டேட்களால் அதிர்ந்து போன கோலிவுட்

விஜய் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கும் “தளபதி 67” படத்தின் அப்டேட் நாளுக்கு நாள் வெளிவந்து கொண்டே இருக்கிறது.

நேற்றைய முன் தினம் படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியல் அடுத்தடுத்து வெளியானது. இந்நிலையில், நேற்றும் சில அப்டேட்களை வெளியிட்டதுபடக்குழு.

இதில், 17 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் விஜய்யோடு ஜோடி சேருகிறார் த்ரிஷா. அதுமட்டுமல்லாமல், இப்படத்தின் ஆடியோ ரைட்ஸை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இப்படத்தின் பூஜை வீடியோவும் நேற்று வெளியிட்டனர். இதில், படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் கலந்து கொள்ள படத்தின் பூஜை எளிமையாக நடைபெற்ற விழாவின் வீடியோ படக்குழுவினர் வெளியிட்டனர்.

இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

Related post