பிரபல படத்தின் இரண்டாம் பாகமா “தளபதி 67”.?

 பிரபல படத்தின் இரண்டாம் பாகமா “தளபதி 67”.?

தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் “வாரிசு” படத்தில் நடித்து வருகிறார். இன்னும் சில தினங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் என தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் லோகேஷ் கனகராஜோடு கைகோர்க்கவிருக்கிறார் விஜய். தளபதி 67 என தற்காலிக டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் பணிகளை ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் ஆரம்பித்துவிட்டார்.

விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படம் மும்பையை பின்னணி கொண்டு ஒரு தாதா’வின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகவிருக்கிறதாம்.

சால்ட் & பெப்பர் லுக்கில் விஜய் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், இப்படம் ரஜினிகாந்த் நடித்த காலா அல்லது பாட்ஷா படத்தின் நீட்சியாக இப்படம் உருவாக இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இவ்வருடத்தின் இறுதியில் “தளபதி 67” படப்பிடிப்பை துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Related post