படப்பிடிப்பிற்கு முன்பே பல கோடிகளை குவிக்கும் “தளபதி 67”!!

 படப்பிடிப்பிற்கு முன்பே பல கோடிகளை குவிக்கும் “தளபதி 67”!!

தளபதி விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தினை முடித்ததும் தனது 67வது படத்தில் நடிக்கவிருக்கிறார் தளபதி விஜய். லோகேஷ் கனகராஜ் இப்படத்தினை இயக்கவிருக்கிறார்.

படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், படத்தின் நடிகர்கள், நடிகைகளின் தேர்வு மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்பு கூட இன்னும் துவங்கப்படாத நிலையில், இப்படத்திற்கான ஓடிடி மற்றும் சேட்டிலைட் உரிமங்கள் விற்கப்பட்டுள்ளன.

அதற்காக பெரும் தொகையும் பேசப்பட்டுள்ளதாம்.

டிஜிட்டல் ரைட்ஸ் நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் 160 கோடிக்கும், சேட்டிலைட் சன் டிவி சுமார் 80 கோடிக்கும் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படம் துவங்கப்படுவதற்கு முன்பே படத்தின் வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்திருப்பது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Related post