இன்று நடைபெறுகிறது ”தளபதி 67” பட பூஜை!

 இன்று நடைபெறுகிறது ”தளபதி 67” பட பூஜை!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் தனது 67 வது படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்திற்கு தற்காலிகமாக “தளபதி 67” என டைட்டில் வைத்துள்ளனர். விக்ரம் பட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் என்பதால் படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இப்படத்தில் த்ரிஷா நடிக்கவிருக்கிறார்.

படத்தின் பூஜை இன்று சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் மிகவும் எளிமையாக நடைபெறவிருக்கிறது.

டைட்டில் டீசர் ஷூட் 3 நாட்கள் நடைபெறவிருக்கும் நிலையில், அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது.

சென்னையில் மட்டும் 2 செட் அமைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related post