தளபதி 67 படத்தில் இணையும் பிரபல ஹீரோ… வேற லெவல்!

 தளபதி 67 படத்தில் இணையும் பிரபல ஹீரோ… வேற லெவல்!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உருவாகி வரும் படம் தான் வாரிசு.

படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

படத்தினை வரும் பொங்கல் தின கொண்டாட்டமாக வெளியிட படக்குழு முடிவெடுத்து அதற்கான அறிவிப்பையும் சில தினங்களுக்கு முன் வெளியிட்டது.

இந்நிலையில், தளபதி விஜய்யின் அடுத்த படத்தை இயக்க தயாராகி வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

அதற்கான ஆயத்த பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார் லோகேஷ். இப்படத்தில் பல நட்சத்திரங்கள் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழலில், சில தினங்களுக்கு முன் நடிகர் விஷாலை படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து பேசியிருக்கிறார் இயக்குனர் லோகேஷ்.

தளபதி 67 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் விஷாலை நடிக்கவைக்க ப்ளான் செய்திருக்கிறார் லோகேஷ்.

விஷாலும் விஜய்யோடு இணைந்தால் படம் வேற லெவலாக இருக்குமே என்று இணையத்தில் ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.

 

Related post