தளபதி 67 ஷூட்டிங் எங்கே தெரியுமா?

 தளபதி 67 ஷூட்டிங் எங்கே தெரியுமா?

இயக்குனர் வம்சி இயக்கத்தில், விஜய் நடித்து பொங்கலுக்கு வெளியாகும் படம் “வாரிசு”. அஜித் நடிப்பில் உருவாகியுள்ள “துணிவு” படத்துடன் “வாரிசு” வெளியாகிறது.

மேலும், கமல் நடிப்பில் மாபெரும் வெற்றியடைந்த “விக்ரம்” படத்திற்கு பின். விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள படம் தான் “#தளபதி67”. இப்படத்திற்காக, விஜய்யிடம் 170 நாட்கள் கால்ஷீட் கேட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

படப்பிடிப்பு எங்கே:

“தளபதி67” படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு, மும்பையில் “லோனாவாலா” என்ற இடத்தில் நடக்கவுள்ளதாகவும். ஷூட்டிங் கிட்டத்தட்ட 35 நாட்கள் நடக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவதற்குள், சென்னை பூந்தமல்லியிலுள்ள “EVP”யில் செட் அமைக்கும் பணிகள் நடக்கும் எனவும். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கும் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை தளபதி67 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவராத நிலையில், டிசம்பர் மாதம் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரியவந்துள்ளது

Related post