தளபதி 67 LCU தான்; டில்லி இருக்கிறார், ஆனால் இவர் இல்லையே;

 தளபதி 67 LCU தான்; டில்லி இருக்கிறார், ஆனால் இவர் இல்லையே;
Digiqole ad

விஜய் நடிப்பில், செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் தளபதி 67.

விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த ஆடியன்ஸும் எதிர்பார்க்கும் படம் தளபதி 67. அதற்கு காரணம் விக்ரம் படத்திற்கு கிடைத்த வெற்றி தான்.

அப்படியிருக்க தளபதி 67 படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பதை படக்குழு ரகசியமாகவே வைத்திருக்கிறது. படத்தின் பூஜை புகைப்படங்களை கூட படகுழு வெளியிடாமல் இருக்கிறது. தளபதி 67-ல் விஜயுடன் கைகோர்த்து மிஸ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலி கான் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

சிலதினங்களுக்கு முன் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பகத் பாசில் “தளபதி 67” படம் LCU அதனால் நான் நடிக்க வாய்ப்புள்ளது என்று கூற, அலாதியான சந்தோஷத்தில் LCU ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் மற்றோரு மாஸ் பிரபலமும் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லோகேஷ் கனகராஜ் தனது படங்களில் பல நடிகர்களை நடிக்க வைத்து விடுவார், அந்த வகையில் தான் தளபதி 67 திரைப்படத்திலும் பலரும் ஏற்கனவே ஒப்பந்தமாகிய நிலையில்.

தற்போது, கைதி படத்தில் டில்லி கதாபாத்திரத்தில் நடித்த கார்த்தி தளபதி 67 திரைப்படத்திலும் நடிப்பார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது ஒரு புறம் இருந்தாலும், கமல் ஹாசனின் கேமியோவும் இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இப்படத்தில் ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யா இருப்பது சந்தேகம் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

காரணம், ரோலெக்ஸ்-ப்ரீகுவல் எடுத்த பின் தான் விக்ரம் 2 என்றும். தளபதி 67ல் ரசிகர்களை ஏமாற்றிவிட்டு. கைதி 2 வில் ரோலெக்ஸை வைத்து மாஸ் காட்டவுள்ளர் லோகேஷ் கனகராஜ் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Digiqole ad
Spread the love

Related post