தளபதி 67; செம அப்டேட் வந்திருக்கு…

 தளபதி 67; செம அப்டேட் வந்திருக்கு…

தளபதி விஜய் நடிக்க வம்சி இயக்கி வரும் “தளபதி 66”ன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

படுவேகமாக நடைபெற்று வரும் இப்படத்தின், படப்பிடிப்பு முடிவடைந்ததும் உடனடியாக தனது 67வது படத்தினை துவங்க இருக்கிறார் விஜய்.

தளபதி 67 படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பது கிட்டத்தட்ட முடிவாகியுள்ள நிலையில், படத்தின் ஆரம்ப கட்ட பணிகளை துவக்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

இந்நிலையில், படத்தினை பற்றிய செம அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி, இப்படத்தில் விஜய், போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும், இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஹீரோவுக்கு இணையாக ஹீரோயின் கதாபாத்திரம் வலுவாக இருக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

 

Related post