தளபதி 68; 3 ஹீரோயின்கள் இடையே போட்டி!?

 தளபதி 68; 3 ஹீரோயின்கள் இடையே போட்டி!?

யாரும் எதிர்பாராத வண்ணம் விஜய்யின் 68வது படமான “தளபதி 68” படத்தின் அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளியானது.

இந்த படத்தினை வெங்கட் பிரபு இயக்கவிருக்கிறார் என்றும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறார் என்றும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தினை பிரமாண்டமான செலவில் தயாரிக்கவிருக்கிறது.

இந்த சூழலில், விஜய்யுடன் ஹீரோயினாக நடிக்க சீதாராமன் திரைப்படத்தில் நடித்த மிருணால் தாக்கூர், வெங்கட் பிரபுவுடன் கஸ்டடி படத்தில் பணியாற்றிய கீர்த்தி ஷெட்டி மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோரின் பெயர்கள் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

இவர்கள் தவிர நயன்தாரா மற்றும் தமன்னா ஆகியோரின் பெயர்களும் பரிசீலிக்கப்படுவதாகவும் படக்குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Related post