இயக்குனர் பாலாவோடு மோதும் விக்ரம்!

 இயக்குனர் பாலாவோடு மோதும் விக்ரம்!

இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “வணங்கான்”. முதலில் சூர்யா இப்படத்தில் நடித்து வந்த நிலையில் பாலாவிற்கும் சூர்யாவிற்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக சூர்யா இப்படத்திலிருந்து விலகினார்.,

அவரைத் தொடர்ந்து அருண் விஜய் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உருவாகியிருக்கும் தங்கலான் திரைப்படமும் அதே ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி திரைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு பெரிய படங்களும் ஒரே தேதியில் மோத இருக்கிறது.

 

Related post