விக்ரம் ரெடி; தங்கலான் அப்டேட்.!?

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உருவாகி வரும் படம் தான் “தங்கலான்”. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஆரம்பித்து வெளியான சின்ன கிளிப்ஸ் வரை மிகப்பெரும் எதிர்பார்ப்பை எகிற வைத்து விட்டது இந்த படம்..
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பெரும் பொருட் செலவில் தங்கலான் படத்தை தயாரித்து வருகிறார்.,
இந்நிலையில், படப்பிடிப்பில் விக்ரமிற்கு விபத்து ஏற்பட்டு தற்போது ஓய்வெடுத்து வருகிறார். உடல்நிலை தேறிவிட்டதால் மீண்டும் படப்பிடிப்பிற்கு விக்ரம் தயாராகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தமாக 105 நாட்கள் தங்கலான் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு விட்டதாகவும், 20 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டியிருப்பதாகவும் இயக்குனர் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.