இல்லாதவர்களுக்கு உதவி செய்!.. ஹீரோவுக்கு டைரக்டர் தங்கர்பச்சான் வேண்டுகோள்!!

 இல்லாதவர்களுக்கு உதவி செய்!.. ஹீரோவுக்கு டைரக்டர் தங்கர்பச்சான் வேண்டுகோள்!!

இல்லாதவர்களுக்கு உதவி செய்!.. ஹீரோவுக்கு டைரக்டர் தங்கர்பச்சான் வேண்டுகோள்!! “டக்கு முக்கு டிக்கு தாளம்”.

ஒருவனிடம் பணம் கொட்டிக் கிடக்கிறது. ஆனால், அவனிடம் நிம்மதி இல்லை. இன்னொருவன் பணத்தை தேடிக் கொண்டே இருக்கிறான். பணம் இல்லாததால் அவனால் வாழ முடியவில்லை. ஒரு கட்டத்தில் பணம் அவர்களைக் குறி வைக்கிறது. அதை நகைச்சுவையோடும் பரபரப்போடும் எடுத்திருக்கும் படம் தான் “டக்கு முக்கு டிக்கு தாளம்”.

“நான் அணிந்திருக்கும் ஆடையை தயாரித்தவர்கள், உண்ணும் உணவை சமைத்தவர்கள், பயணிக்கும் சாலையை அமைத்தவர்கள், குப்பை அள்ளுபவர்கள், நாம் வாழக்கூடிய வீட்டைக் கட்டிக் கொடுத்தவர்கள் இவர்களின் பிள்ளைகள் காலம் காலமாக அங்கேயே தான் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி நினைத்துப் பார். நீ உன்னுடைய ஊதியத்தில் 10 விழுக்காடு அந்த பிள்ளைகளுக்கு ஒதுக்க வேண்டும். இந்த மனநிலைக்கு நீ தயாராகி விடு. நீ செய்வாய், இருந்தாலும் நான் சொல்கிறேன் என்று இப்படத்தில் அறிமுக நாயகனாக அறிமுகமாகும் மகனுக்கு அறிவுரை கூறினார், டைரக்டர் தங்கர் பச்சான்.

Related post