இந்தியன் 2 படத்தில் கமலுக்கு இத்தனை வில்லன்களா?

 இந்தியன் 2 படத்தில் கமலுக்கு இத்தனை வில்லன்களா?

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த படம் “இந்தியன்”. அரசியலையும், அரசின் அலட்சியத்தையும், ஊழலையும் வெளிப்படையாக பேசிய படம் அது.

ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தியன்-2 திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு 7 வில்லன்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும், பிரம்மாண்ட செட் அமைத்து பெரும் பொருட் செலவில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related post