தி அகாலி – விமர்சனம் 2/5

 தி அகாலி – விமர்சனம் 2/5

யக்கம்: முகமது ஆசிப் ஹமீத்

நடிகர்கள்: நாசர், ஜெயக்குமார், தலைவாசல் விஜய், ஸ்வயம் சிதா, வினோத் கிஷன், வினோதினி, அர்ஜை, சேகர், யாமினி, தரணி, பரத், இளவரசன், விக்னேஷ் ரவிச்சந்திரன், சபிர் அலி,

ஒளிப்பதிவு: கிரி முர்ஃபி

கலை இயக்குனர்: தோட்டா தரணி

படத்தொகுப்பு: இனியவன் பாண்டியன்

தயாரிப்பாளர்: யுகேஷ்வரன்

கதைப்படி,

போலீஸ் அதிகாரியான ஜெயக்குமாரை விசாரிக்க வருகிறார் ஸ்பெஷல் அதிகாரியான ஸ்வயம் சிதா. சில வருடங்களுக்கு முன் நடந்த நரபலி சம்மந்தமான வழக்கு அது.

அந்த வழக்கில் ஜெயக்குமாரும் இருப்பதால், அவரிடம் விசாரணை நடைபெறுகிறது. எதற்காக அந்த நரபலி நடந்தது என்பதற்கான விளக்கத்தையும் அந்த வழக்கை விசாரித்த போது தான் சந்தித்த இன்னல்களையும் ஜெயக்குமார் பட்டியலிடுகிறார்.

ப்ளாஷ் பேக் செல்கிறது…. ஜெயக்குமாரின் பார்வையில் கதை நகர்கிறது. நரபலியை கொடுத்தது ஒரு பெண் என்றும் மற்றொரு நரபலி கொடுக்க அப்பெண் முயற்சியும் செய்கிறார்.

மேலும், தன்னுடன் இருந்த காவலரும் அமானுஷ்யத்தின் கட்டுப்பாட்டிற்கு சென்று விடுகிறார். இந்த வழக்கை விசாரிக்கும் போது நாசரும் இந்த வட்டத்திற்குள் வருகிறார்.

அகாலி என்பது என்ன.? அமானுஷ்யம் என்பது உண்மை தானா.?? இந்த நரபலியை யார் கொடுத்தது என்ன நோக்கம் என்பது தான் இந்த படத்தின் மீதிக் கதை.

தனது அனுபவ நடிப்பை பல இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார் நாசர். இரண்டாம் பாதியில் இவர் மீது வைக்கப்பட்ட ட்விஸ்ட் காட்சிகள் சுவாரஸ்யம்.

அமானுஷ்யம் என்பது உண்மையா இல்லையா என்பதை ஒருத்தர் உணரும் தருணத்தில் மட்டுமே இருக்கிறது என்பதை கூறியிருக்கிறார்கள்.

அமானுஷ்யம் இருக்கிறது என்றால் ஆம் இருக்கிறது, இல்லை என்றால் ஆம் இல்லை..பார்க்கும் பார்வையில் மட்டுமே அது உள்ளது என்று கூறியிருக்கிறது படக்குழு.

வித்தியாசமான முயற்சி என்றாலும் அதை கூறிய விதத்தில் அதிகமாகவே தடுமாறியிருக்கிறது படக்குழு. ஜெயக்குமாரிடம் விசாரணை நடத்துகிறார் ஸ்வயம் சிதா, ப்ளாஷ் பேக்கில் ஜெயக்குமார் பலரிடம் விசாரணை நடத்துகிறார், நாசர் ப்ளாஷ் பேக்காக ஒரு நீண்ட கதை சொல்கிறார்.. இப்படியாக படம் முழுக்க அனைவரும் பேசிக் கொண்டே இருந்து காட்சிகளை குறைத்ததால் படத்தின் மீது பெரிதான ஈர்ப்பு எட்டவில்லை.

ஒளிப்பதிவு ஓகே ரகம் தான். பின்னணி இசையும் பெரிதாக கைகொடுக்கவில்லை.

Related post