மாஸ் காட்டிய வேஷ்டி கெட் அப்; மில்லியன் பார்வைகளை கடந்த தனுஷின் “கேப்டன் மில்லர்” பட பூஜை!!
ராக்கி, சாணிக் காயிதம் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உருவாகி வருகிறது கேப்டன் மில்லர்.
இந்த படத்தை சத்ய ஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது. சில தினங்களுக்கு முன் தான் இப்படத்தின் பூஜை நடத்தப்பட்டது தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இப்பூஜை விழாவின் வீடியோவை இதுவரை யூ டியூப் தளத்தில் சுமார் 1 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது.
இது, இப்படத்தின் மேல் இருக்கும் ஆவலை தொடர்ந்து அதிகரிக்க வைத்திருக்கிறது என்று கூறலாம்..
பீரியாடிக் படமாக இப்படம் உருவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் பூஜையில் தனுஷ் முறுக்கு மீசையுடனும் வேஷ்டி சட்டை லுக்குடன் வந்து மாஸாக கலந்து கொண்டதால் ரசிகர்களிடையே இந்த வீடியோ பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.