தி கிரேட் இந்தியன் கிச்சன் விமர்சனம்

 தி கிரேட் இந்தியன் கிச்சன் விமர்சனம்

துரகரம் சௌதுரி, நீல் சௌதுரி இனைந்து தயாரித்திருக்கும் படம் “THE GREAT INDIAN KITCHEN” மலையாள படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் இப்படம். ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்திரன், நந்தகுமார் மற்றும் சிலர் நடித்திருக்கும் படம் இது. இப்படத்தை ஆர்.கண்ணன் இயக்கியுள்ளார்.

வருகிற பிப்ரவரி 3ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.

எதை பேசுகிறியது இப்படம்?

திருமணமான பெண், கணவன் வீட்டில் படும் இன்னல்களையும். அங்குள்ள சூழ்நிலையையும் எப்படி எதிர் கொள்கிறாள்? எதனால் எதிர்கொள்கிறாள்? எதிர் கொள்கிறாளா? என்பதை இப்படம் பேசுகிறது.

கதைப்படி,

நாயகி ஐஸ்வர்யா ராஜேஷுக்கும், நாயகன் ராகுலுக்கும் திருமணம் ஆகிறது. ஆனால், ராகுல் வீட்டில். ராகுலுக்கு சாம்பாரும், மாமனாருக்கு சட்னியும் ஒருவருக்கு காரமாகவும், ஒருவருக்கு காரம் கம்மியாகவும் சமைக்கிறார் ஐஸ்வர்யா.

இதெல்லாம் கூட பொறுத்துக்கொள்ளும் ஐஸ்வர்யா, கணவன் சாப்பிட்ட சாப்பாட்டு கழிவுகளை டைனிங் டேபிளில் ஆங்காங்கே சிதறவிட பார்க்கும் நமக்கே அருவெறுப்பாக இருக்கிறது.

இது போல பல இன்னல்களை பொறுத்துக்கொள்ளும் ஐஸ்வர்யா இறுதியில் எடுத்த முடிவு என்ன என்பதே படத்தின் மீதிக்கதை…

ராகுல், நந்தகுமார் மற்றும் உடன் நடித்த அனைவரும் கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்து, படத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளனர்.

ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டுமே படத்தை தாங்கி பிடிக்கும் தூணாக இருந்துள்ளார். பல இடங்களில் அவர் படும் வலியையும் வேதனையையும் உணர செய்துள்ளார். படத்திற்கு படம் இவரின் நடிப்பு நம்மை வியக்க வைத்துக் கொண்டே தான் இருக்கிறது.

மலையாள படத்தை ரீமேக் செய்த ஆர்.கண்ணன். மலையாள படத்தில் இருந்த மண் வாசனையை கொடுக்க தவறியிருக்கிறார் என்பதே நிதர்சனம்.

மலையாளத்தில் படம் பார்க்காத ரசிகர்கள் இப்படத்தை பார்த்தால் எந்த வித்தியாசமும் தெரியாது.

வசனங்களை வலுவாக அமைத்ததற்கு பாராட்டுக்கள்.

தி கிரேட் இந்தியன் கிச்சன் – பெண்களில் சிறை – – (3/5)

Related post