பார்த்திபனோடு மோதத் துணிந்த “தி லெஜண்ட்”!

 பார்த்திபனோடு மோதத் துணிந்த “தி லெஜண்ட்”!

இயக்குனர் ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில் தி லெஜண்ட் சரவணா நடித்திருக்கும் படம் தான் “தி லெஜண்ட்”.

சில தினங்களுக்கு முன் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது.

மிகப்பெரும் பொருட் செலவில் சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்கள் இவ்விழாவிற்காக பல கோடி செலவில் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கும் இப்படம், வரும் ஜூலை 15 ஆம் தேதி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே தேதியில், ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் “இரவின் நிழல்” படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Related post