பத்து கதாநாயகிகள் கலந்து கொள்ளும் ”தி லெஜண்ட்” பட இசை வெளியீட்டு விழா!

 பத்து கதாநாயகிகள் கலந்து கொள்ளும் ”தி லெஜண்ட்” பட இசை வெளியீட்டு விழா!

சென்னையில் பிரபலமான சரவணா ஸ்டோரின் முதலாளியான சரவணன் கதாநாயகனாக நடிக்க, விளம்பர படங்களை இயக்கும் ஜே-ஜெர்ரி அவர்களின் இயக்கத்தில் ”தி லெஜண்ட்” என்ற படம் உருவாக இருக்கிறது.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் நடிகைகள் பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, ஊர்வசி ரடேலா, ராய் லட்சுமி, ஷரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீலீலா, யாஷிகா ஆனந்த், நுபுர் சனோன், டிம்பிள் ஹயாத்தி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளார்கள்.

மிகப்பெரும் பொருட்செலவில் அல்லது மிகப்பெரும் நடிகர்களின் படங்களின் இசை வெளியீட்டு விழா போல் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுவதால் படத்திற்கு சற்று எதிர்பார்ப்பு அதிகமாகவே நிலவி வருகிறது.

Spread the love

Related post