லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: – தி ரிங்ஸ் ஆஃப் பவர் தொடரின் புதிய டீசர் டிரெய்லர் வெளியீடு

 லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: – தி ரிங்ஸ் ஆஃப் பவர் தொடரின் புதிய டீசர் டிரெய்லர் வெளியீடு

மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்த எட்டு-பாகத் தொடர் செப்டம்பர்-2, 2022 அன்று பிரைம் வீடியோவில் திரையிடப்படும்

அதிகாரப்பூர்வ டீஸர் டிரெய்லரை இங்கே காணலாம்

மும்பை, இந்தியா —ஜூலை 14, 2022—அமேசான் ஸ்டுடியோஸ் வழங்கும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் தி லார்ட் ஆப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர் தொலைக்காட்சி தொடரின் இரண்டாவது டீஸர் இன்று வெளியிடப்பட்டது. ஜே.ஆர்.ஆர் டோல்கீனின் புனைகதையான செகண்ட் ஏஜ் ஆப் மிடில் எர்த், லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்க்ஸ் ஆஃப் பவர் தொடராக வெளிவருகிறது மற்றும் செப்டம்பர் 2, 2022 அன்று பிரைம் வீடியோவில் உலகளவில் வெளியிடப்படவுள்ளது.

இத்தொடரின் கதைக்களத்தை எடுத்துக் கூறும் இதன் புதிய 2.30 நிமிட டீசரில் நியூமெனோர் தீவு இராச்சியத்திலிருந்து டோல்கீனின் சில பழம்பெரும் கதாபாத்திரங்களான இசில்துர் (மாக்சிம் பால்ட்ரி), எலெண்டில் (லாய்ட் ஓவன்), ஃபராஸன் (டிரிஸ்டன் கிராவெல்) மற்றும் ராணி ரீஜண்ட் மிரியல் (சிந்தியா அடாய்-ராபின்சன்) ஆகியரை ரசிகர்கள் முதன்முதலாகக் காணமுடியும். கெமன் (லியோன் வாதம்) மற்றும் ஈரியன் (எமா ஹார்வத்) ஆகியோர் கூடுதல் நியூமெனோரியன்களாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எட்டு பாகங்கள் கொண்ட இத்தொடரில் ரசிகர்கள் காணவுள்ள சில பகுதிகளையும் இந்த டீஸர் டிரெய்லர் எடுத்துக்காட்டுகிறது, இதில் எல்வெனின் லிண்டன் அண்ட் எரிஜியன் சாம்ராஜ்யம், ட்வார்வனின் கசாத்-டம் சாம்ராஜ்யம், சவுத்லேண்ட், வடக்குப்புற தரிசுநிலப் பகுதி, சீரும் கடல் மற்றும் நுமேனோர் தீவு இராச்சியம் ஆகியவை அடங்கும்..

கலாட்ரியல் (மார்ஃபிட் கிளார்க்), எல்ரோன்ட் (ராபர்ட் அராமயோ), ஹை கிங் கில்-கலாட் (பெஞ்சமின் வாக்கர்), தி ஹார்ஃபூட்ஸ் மேரிகோல்ட் பிராண்டிஃபுட் (சாரா ஸ்வாங்கோபானி), எலனோர் ‘நோரி’ பிராண்டிஃபுட் (மார்கெல்லா கவெனாக்), பாப்பி பிரவுட்பிலோ ஃபெலோ (மேகன் ரிச்சர்ட்ஸ்) மற்றும் சாடோக் பர்ரோஸ் (சர் லென்னி ஹென்றி), தி ஸ்ட்ரேஞ்சர் (டேனியல் வெய்மன்), ட்வார்வ்ஸ் கிங் டுரின் III (பீட்டர் முல்லன்) மற்றும் பிரின்ஸ் டுரின் IV (ஓவைன் ஆர்தர்), ஹால்பிரண்ட் (சார்லி விக்கர்ஸ்), மற்றும் அரோண்டிர் (இஸ்மாயில் குரூஸ் கோர்டோவா) ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ள முக்கிய நடிகர் ஆவர்.

பல பாகங்களைக் கொண்ட இந்தத் தொடர் பிரைம் வீடியோவில் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் செப்டம்பர் 2, வெள்ளிக்கிழமை முதல் ஸ்ட்ரீம் செய்யப்படும் மற்றும் வாரந்தோறும் புதிய எபிசோடுகள் வெளியாகும்..

 

 

Related post