தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் இன்று பதவியேற்பு நடந்தது.

 தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் இன்று பதவியேற்பு நடந்தது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் இன்று சென்னையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் பதவி ஏற்றுக்கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாகிகளிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

சில படங்களுக்கு பிரச்சனை வரும் போது நடிகர் சங்கம் சார்பில் அவர்களுக்கு உதவ திட்டம் உள்ளதா ?
அதற்கு பதிலளித்த நடிகர் கார்த்தி தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்திற்கு சில அமைப்புகள் மூலம் பிரச்சினை வரும்போது சட்டப்படியாக நடிகர் சங்கம் உதவும்.

நடிகர் சங்கத்திற்கான கட்டடம் பணிகள் மூன்று மாதத்தில் தொடங்கும் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வெற்றியடைந்த நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். அனைவருக்கும் 97 வயதாகும் நடிகர் சங்கத்தின் மூத்த கலைஞர் மணி அய்யர், மற்றும் 95 வயதாகும் ஊட்டி மணி இருவரும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்கள்.

அதற்கு முன் நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முருகன் உள்ளிட்ட செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் பேசிய நடிகர் நாசர், இந்த வெற்றியின் மூலம் நாங்கள் எடுத்துக்கொண்ட பொறுப்பு மேலும் கூடுதலாகியுள்ளது என தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய விஷால், நடிகர் சங்க தேர்தலுக்கு ஆகும் செலவை கட்டடத்திற்கு பயன்படுத்த நாங்கள் நினைத்தோம். அத்துடன் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் எனவும் முயற்சித்தோம். ஆனால் எதிரணியினர் இதை போட்டியாக பார்த்தனர். தேர்தல் முடிந்து 3 ஆண்டுகள் கழித்து வாக்கு எண்ணிக்கை நடைபெறுவது வேறு எங்கும் நடைபெறவில்லை. இதுதான் முதல் முறை. தற்போது நாங்கள் வெற்றி அடைந்துள்ளோம். திரும்ப திரும்ப நாங்கள் சொல்வது ஒன்று தான், நாடக நடிகர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக தான் நாங்கள் எல்லோரும் போராடுகிறோம். அது நல்லபடியாக நடக்கும் என விஷால் தெரிவித்தார். அத்துடன் நடிகர் சங்க கட்டடத்தை அப்போதைய விட தற்போதைய நிலவரப்படி இருபத்தி ஒரு கோடி ரூபாய் தேவைப்படுகிறது.

30% விலை உயர்ந்துள்ளது. அதற்கான நிதி திரட்டும் வேலையில் இறங்க உள்ளோம். நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்டவர்கள் அனைவரையும் நேரில் சந்திப்போம். இந்த நேரத்தின் இக்கட்டான காலகட்டத்தில் தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன், உறுதுணையாக இருந்த வழக்கறிஞர் கிருஷ்ணா மற்றும் நடிகர் சங்கத்தின் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் விஷால் கூறினார்.

நடிகர் கார்த்தி, நாங்கள் செய்த வேலைக்கு தேர்தலை நடக்காது போட்டியின்றி தேர்வு ஆகும் என நினைத்து இருந்தோம். ஆனால் தேர்தல் நடைபெற்று தற்போது வெற்றி அடைந்து உள்ளோம். தற்போதைய சூழலில் நிதி திரட்டுவது என்பது சவாலான பணியாக இருக்கிறது. நிறுத்தப்பட்ட வேலைகள் மீண்டும் தொடங்க வேண்டும் அதற்கு திட்டமிடுதல் வேண்டும் எனவே கட்டட வேலைகளை மூன்று மாதத்திற்குள் தொடங்க உள்ளோம் என கூறினார். அத்துடன் நடிகர் சங்கத்தில் தற்போது கடன்கள் எதுவும் கிடையாது. நிதிகள் அனைத்தும் கட்டடத்திற்கு செலவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். இறுதியாக பேசிய பூச்சி முருகன் நடிகர் சங்கத்திற்கு பையனூரில் அரசு ஏழு ஏக்கர் நிலம் வழங்கி உள்ளது அதில் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தனி மண்டபம் கட்டி அவர்கள் தங்குவதற்கு வழிவகை செய்யப்படும் என தெரிவித்தார்.

தணிக்கை செய்யப்பட்ட படத்திற்கு அமைப்புகள் மூலம் பிரச்சினை வரும்போது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க நடிகர் சங்கம் உதவுவது அவசியம் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

Rock fort தயாரிப்பாளர் முருகானந்தம் அவர்கள் நடிகர் சங்கத்திற்கான கட்டிட பணிகளுக்காக ₹5 லட்சம் காசோலை நன்கொடை அளித்தார்.

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக ₹10 ஆயிரம் காசோலை வழங்கப் பட்டது. அத்துடன் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அனைவர் முன்பாகவும் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

புதிய நிர்வாகிகளுக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம், மற்றும் பலர் சால்வே அணிவித்து மரியாதை செய்தனர்.

Related post