நடிகர் சங்க கட்டிடத்திற்காக ரூ.25 இலட்சம் நன்கொடை வழங்கிய “விருமன்” படக்குழு!

 நடிகர் சங்க கட்டிடத்திற்காக ரூ.25 இலட்சம் நன்கொடை வழங்கிய “விருமன்” படக்குழு!

தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. அதில் நாசர், கார்த்தி, பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் குஷ்பு, கோவை சரளா, ராஜேஷ், மனோபாலா, பசுபதி, சோனியா, பிரசன்னா, நந்தா உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், நடிகர் சங்க கட்டிட பணிகளை தொடங்குவது, கட்டிட நிதி திரட்டுவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் ராஜசேகர கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் இணைந்து “விருமன்” படக்குழுவின் சார்பில் நடிகர் சங்க கட்டிட நிதியாக ரூ.25 லட்சத்துக்கான காசோலையை தலைவர் நாசரிடம் வழங்கினர்.

 

Spread the love

Related post

You cannot copy content of this page