Theedhum Nandrum – திரைப்படம் விமர்சனம்

 Theedhum Nandrum – திரைப்படம் விமர்சனம்

தீதும் நன்றும் : படத்தின் கதை ஒரு பெட்ரோல் பங்கில் மூன்று நண்பர்கள் சேர்ந்து கொள்ளையடிப்பது போன்ற காட்சியிலிருந்து படம் துவங்குகிறது.படத்தின் நாயகர்கள் மூன்று பேரும் சிவா,தாஸ் மற்றும் மாறன் நண்பர்கள் ஒன்றாக ஊர் சுற்றி கொள்ளையடித்து வாழ்கிறார்கள். தாஸுக்கு அபர்ணா பாலமுரளியின் மேல் காதல் வருகிறது.அபர்ணா அவரை இந்த திருட்டு விட்டு விடும் படி அறிவுரை கூறுகிறார் ஆனால் அவர் பேச்சை கேட்காமல் மறுபடியும் கொள்ளையடித்து போலீசிடம் சிக்கி ஜெயிலுக்கு செல்கிறார்.ஜெயிலில் இருந்து வந்ததும் காதலி சொன்னது திருந்தி வாழ முடிவு செய்கிறார் ஆனால் விதி அவரை மறுபடியும் நண்பர்களுடன் சேர்ந்து கடைசியாக ஒருமுறை கொள்ளையடிக்க அழைத்து செல்கிறது, பின்பு அவர்களின் வாழ்க்கை என்ன ஆனது என்பது மீதி கதை.

படத்தின் நாயகர்களில் ஒருவரும் படத்தின் இயக்குனரும் ராசு ரஞ்சித் சிவா என்கிற கதாபாத்திரத்தில் வருகிறார். நடிப்பில் நன்றாக ஸ்கோர் செய்கிறார். மற்ற நடிகர்களும் தங்களது பங்கை சிறப்பாக செய்துள்ளார்கள். படத்தின் நாயகி அபர்ணா சூரைரை போற்று படத்திற்கு பிறகு இந்த படத்தில் வருகிறார்,நடிப்பிலும் வலு சேர்கிறார்.படத்தின் கொள்ளையடிக்கும் காட்சிகள் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. படத்தின் பலமே படத்தின் காட்சியமைப்புகள் தான், பழகிய கதையாக இருந்தாலும் வித்தியாசமாக காட்ட முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் மற்றும் எடிட்டர் ராசு ரஞ்சித். படத்தின் நீளத்தை சற்று குறைத்து இன்னும் விறுவிறுப்பை கூறியிருக்கலாம்.

தீதும் நன்றும் : பாராட்டலாம்.

Related post