பரபரப்பை ஏற்படுத்திய விஜய் ரசிகர்கள் போஸ்டர்

 பரபரப்பை ஏற்படுத்திய விஜய் ரசிகர்கள் போஸ்டர்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் “வாரிசு”. இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மாவட்ட வாரியாக நிர்வாகிகளை அவ்வப்போது சந்தித்து புகைப்படமும் எடுத்து வருகிறார் தளபதி விஜய்.

நேற்றைய தினம், தமிழக முதல்வர் மு கஸ்டாலின் மகனும், சேப்பாக்கம் தொகுதியின் எம் எல் ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்றார்.

இந்நிலையில், தளபதி விஜய்யின் ரசிகர்கள் சிலர், எத்தனை வாரிசுகள் வந்தாலும், மக்கள் கொண்டாடும் தமிழகத்தின் அரசியல் வாரிசே வருக, வாகை சூடுக என்று வாசகத்தோடு தமிழக மட்டுமல்லாது இந்திய வாரிசு அரசியல் தலைவர்களின் புகைப்படங்களையும் அந்த நோட்டிஸில் அச்சடித்துள்ளனர்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Related post