தெற்கத்தி வீரன் விமர்சனம்

 தெற்கத்தி வீரன் விமர்சனம்

அறிமுக நடிகர் சாரத் இயக்கி, தயாரித்து, நடித்திருக்கும் படம் “தெற்கத்தி வீரன்”. அனகா, வேலா ராமமூர்த்தி, மதுசூதனன், பரணி, பவன், ஆர்.என்.ஆர் மனோகர், நமோ நாராயணன், அசோக், கபீர் துஹன் சிங் என பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் இது. ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.

கதைப்படி,

தூத்துக்குடியில் மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர் சாரத். திடீரென ஒரு நாள் சாரத்தின் நண்பன் அசோக் கொலை செய்யப்பட, கொலை குற்றவாளியாக பிடிபடுகிறார் சாரத். அப்போது, போலீஸ் அடித்துக் கொண்டிருக்கும் வேளையில், பிளாஷ் பேக் கதை என நான்-லீனியர் பேட்டர்னில் ஆரம்பிக்கிறது கதை.

மக்களுக்கு எந்த கஷ்டம் வந்தாலும் உதவி செய்யும் பெரிய வீட்டு பிள்ளை சாரத். மக்களுக்காக அடிதடியில் கூட இறங்கிவிடுகிறார். ஏரியா கவுன்சிலர், சாதிக்கட்சி தலைவர், மந்திரி என அனைவரிடமும் பிரச்சனை செய்துவர. அனைவரும் சாரத்தை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டுகின்றனர்.

அந்த திட்டத்தில் சிக்கிய சாரத் எப்படி மீள்கிறார்? அசோக்கை கொன்றது யார்? நண்பனின் இறப்புக்கு பழி தீர்த்தாரா சாரத்? என்பது மீதிக்கதை…

சாரத்தின் முதல் படம் என்பது நடிப்பு மற்றும் இயக்கத்தில் அப்பட்டமாக தெரிகிறது. ஒரு வசனத்தில் கூட மவுத் சிங்க் இல்லை. தூத்துக்குடியில் நடக்கும் கதையை அங்கேயே படமாகியிருக்கலாமே. எதற்காக சென்னை காசிமேட்டில் எடுக்க வேண்டும் என்ற கேள்வி. திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தியிருந்தால் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும்.

வெகு சில காட்சிகள் மட்டுமே வரும் வேலா ராமமூர்த்தி, பவன், நமோ நாராயணன், பரணி, ஆர்.என்.ஆர்.மனோகர் என அனைவரும் தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் என்பதால் கொடுத்த பாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர்.

ஸ்ரீ காந்த் தேவா, ஒவ்வொருவர் வில்லனுக்கும் தனித்தனி பி.ஜி.எம் அமைத்துள்ளார். இருந்தாலும், படம் முழுக்க இசை பயணிப்பது சற்று மந்தமடைய செய்கிறது. பாடல்கள் சுமார் ரகம்.

தெற்கத்தி வீரன் – மக்கள் சேவகன்.

Related post