திருச்சிற்றம்பலம் படத்தின் நீளம் இவ்வளவு தானா.?

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் தான் “திருச்சிற்றம்பலம்”.
இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா, நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அனிருத் இசையமைத்திருக்கிறார்.
படம் வரும் 18ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் நீளம் 2 மணி 10 நிமிடங்கள் ஆகும். சில வருடங்களுக்குப் பிறகு தமிழில் திரைக்கு தனுஷ் படம் வெளியாவதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.