இந்த வருடம் இந்திய அளவில் மாஸ் காட்டிய கன்னட படங்கள்…!!
இந்திய அளவில் இதுவரை பாலிவுட் திரைப்படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் சாதனை என்பதை தக்க வைத்துக் கொண்டிருந்தன.
இதுவரையில் வெளிவந்த படங்களில் சுமார் 100 ஹிந்திப் படங்கள் 100 கோடி வசூலைப் பெற்ற படங்களாக உள்ளன.
தமிழில் 30 படங்களும், தெலுங்கில் 10 முதல் 15 படங்களும், மலையாளத்தில் 7 படங்கள் வரையிலும் 100 கோடி வசூலைக் கடந்துள்ளன.
‘கேஜிஎப்’ படத்தின் முதல் பாகம்தான் முதன் முதலில் 100 கோடி வசூலைக் கடந்த கன்னடப் படமாக அமைந்தது. அதற்குப் பிறகு இந்த ஆண்டில் வெளிவந்த கிச்சா சுதீப் நடித்த ‘விக்ராந்த் ரோணா’, மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நடிப்பில் வெளிவந்த ‘ஜேம்ஸ்’, ரக்ஷித் ஷெட்டி நடித்து வெளிவந்த ‘777 சார்லி’, மற்றும் யஷ் நடிப்பில் வெளிவந்த ‘கேஜிஎப் 2’ ஆகிய படங்கள் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்த படங்களாக அமைந்தது.
இப்போ அந்த வரிசையில் 100 கோடி வசூலைக் கடந்த படமாக ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து செப்டம்பர் 30ல் வெளிவந்த ‘காந்தாரா’ படம் நேற்று 100 கோடி வசூலைக் கடந்திருக்கிறது.
மிக குறைவான பட்ஜெட்டில் உருவான இப்படம், மிகப்பெரும் வசூலை வாரிக் குவித்து வருகிறது.
சுமார் 200 கோடி ரூபாய் வசூலை எளிதாக இப்படம் கடக்கும் எனவும் நம்பப்படுகிறது.
ஆக, கன்னட சினிமாவில் இந்த ஆண்டில் வெளிவந்த 5 படங்கள் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.