தனுஷின் திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா.?

 தனுஷின் திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா.?

தனுஷ் நடிக்க மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் “திருச்சிற்றம்பலம்”. இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் அனிருத்.

சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்திருக்கிறது. மேலும், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர்,ராஷி கண்ணா, பிரகாஷ் ராஜ், பாரதிராஜா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.

ஆகஸ்ட் 18ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கும் நிலையில், இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்லதொரு வரவேற்பை பெற்று வருகிறது.

வரும் 29 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தப்படவிருக்கிறதாம். இதற்காக படக்குழுவினர் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

 

Related post