மாஸ் காட்டிய துணிவு; நம்பர் ஒன் இடத்தில் அஜித்!

 மாஸ் காட்டிய துணிவு; நம்பர் ஒன் இடத்தில் அஜித்!

அஜித்குமார் நடிப்பில் ஹச் வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் துணிவு. விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் வாரிசு.

இந்த இரு படங்களும் நேற்றைய தினம் உலகம் முழுவதும் வெளியானது. மிகப்பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே இவ்விரு படங்களும் வெளியானது.

இந்நிலையில், படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் எந்த படம் அதிகம் வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.

அதன்படி, வாரிசு திரைப்படம் 22 கோடி வசூல் செய்துள்ளதாகவும், துணிவு திரைப்படம் 25 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.

உலகம் முழுவதும் செய்த வசூல் நிலவரம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related post