வென்று காட்டிய அஜித்… வசூல் வேட்டை நடத்தும் துணிவு

 வென்று காட்டிய அஜித்… வசூல் வேட்டை நடத்தும் துணிவு

இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க பொங்கல் வெளியீடாக வெளிவந்த திரைப்படம் தான் துணிவு.

விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட இப்படம் தொடர்ந்து அரங்குகள் நிறைந்த காட்சிகளாக திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது.

நாட்டின் அத்தியாவசிய ஒரு மூலக்கருவை கையில் எடுத்து படம் வெளிவந்ததால் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், நேற்றோடு இப்படம் சுமார் 250 கோடிக்கும் அதிகமாக வசூலை வாரிக்குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரிதான எவ்வித ப்ரொமோஷன் எதையும் செய்யாமல், நல்ல கதை அதற்கான வெற்றியைத் தேடிக் கொள்ளும் என்று அஜித் கூறிய அந்த வார்த்தை போல், நல்ல கதையான துணிவு நல்ல ஒரு வெற்றியை கொடுத்திருக்கிறது.

நாளை இப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related post