சில்லா சில்லா… வாரிசு படத்தைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய துணிவு

இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உருவாகி வரும் படம் தான் துணிவு. படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஜிப்ரான். துணிவு படத்தில் இடம்பெறவிருக்கும் ‘சில்லா சில்லா’ எனும் பாடலை அனிருத் பாடியுள்ளார். இப்பாடலை ‘காக்கா கத’ புகழ் வைசாக் எழுதியுள்ளார். விரைவில் இந்த பாடல் வெளியாகவுள்ளது என ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதற்கு முன் தினம் தான் தளபதி விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் இடம்பெற்றுள்ள ரஞ்சிதமே என்ற பாடலின் அப்டேட்டை அப்படக்குழு அறிவித்திருந்தது.
இந்த இரு படங்களும் பொங்கல் தின கொண்டாட்டமாக வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.