உலகின் பெரிய தியேட்டரில் துணிவு; கொண்டாடும் ரசிகர்கள்!

 உலகின் பெரிய தியேட்டரில் துணிவு; கொண்டாடும் ரசிகர்கள்!

ஹச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்திருக்கும் துணிவு திரைப்படம் வரும் 11ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

சில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரும் அளவிற்கு வரவேற்பு பெற்றது.

இந்நிலையில், துணிவு திரைப்படம் உலகின் மிகப்பெரிய தியேட்டரில் ரிலீஸ் ஆகப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பாரிஸில் உள்ள உலகின் பெரிய தியேட்டரான Grand Rex தியேட்டரில் ரிலீஸ் ஆகிறது.

இந்த தியேட்டரில் சுமார் 2700 இருக்கைகள் இருக்கின்றன. தற்போது, இந்த திரையரங்கில் துணிவு படத்திற்கான முன்பதிவு தொடங்கியிருக்கிறது.

இதனை ரசிகர்கள் இணையத்தில் பெரிதாக கொண்டாடி வருகின்றனர்.

 

Related post