கன்னட படத்தில் நடித்த பாஜக தலைவர் அண்ணாமலை… ஒரு ரூபாய் தான் சம்பளமாக பெற்றுக் கொண்டாராம்.!

 கன்னட படத்தில் நடித்த பாஜக தலைவர் அண்ணாமலை… ஒரு ரூபாய் தான் சம்பளமாக பெற்றுக் கொண்டாராம்.!

கர்நாடகாவில் ஐபிஎஸ் போலீஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை, தனது வேலையை துறந்து அரசியல் கட்சியில் சேர்ந்தார். பாஜக-வில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்து கொண்டு, இன்று தமிழக பாஜக தலைவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், கன்னடத்தில் அரபி என்ற படத்தில் நடித்திருக்கிறார் அண்ணாமலை. இரண்டு கைகளும் இல்லாமல் சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு சாதனைகளை செய்த நீச்சல் வீரர் விஸ்வாசின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகியுள்ளது.

இதில் விஸ்வாசின் பயிற்சியாளராக அண்ணாமலை நடித்துள்ளார். படத்தின் டீசர் மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வெளியாகவில்லை.

இந்த படத்தில் நடித்ததற்கு பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கி நடித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related post