Top Gun Maverick 2022 Movie Review

கிட்டத்தட்ட 36 வருடங்களுக்கு பிறகு வந்திருக்கும் டாப் கன் திரைப்படத்தின் அடுத்த பாகம். 1986 ல் வந்த டாப் கன் இப்போது வரை க்ளாசிக்காக கொண்டாடப்படுகிறது. அந்த படத்தை மோசம் செய்யாமல் அட்டகாசமான ஒரு எண்டர்டெயின்மெண்டாக, எமோஷனலும் சரியாக கலந்து தந்திருக்கிறார்கள்.சிம்பிளான கதைகளே இப்போது வருவதில்லை ஒவ்வொரு ஃபிரேமும் பரபரவென இருக்க வேண்டும், நிறைய டிவிஸ்ட் இருக்க வேண்டும். ஒவ்வொரு நொடியும் இரத்தம் துடிக்க வேண்டும்அது எதுவும் இல்லாமல் மிக சிம்பிளான கதை அதை ஒரே நேர் கோட்டில் சொல்லியது அருமை.குஷி மாதிரி இது தான் கதை இந்த மிஷன் தான் படம் இத தான் சொல்லப்போறோம்னு தெளிவா சொல்லிட்டு தான் படம் ஆரம்பிக்குது அதுவே சூப்பர்மேவரிக் பாத்திரம் அமெரிக்க இளைஞர்களின் கனவு பாத்திரம் இந்த வயதிலும் டாம்குரூஸ் அந்த பாத்திரத்தை அப்படியே மீட்டு கொண்டு வந்திருக்கிறார். இந்த மனுசனுக்கு வயசே ஆகாதா ?
பழைய படத்தின் வசனங்கள் பாடல்கள் கேமியோக்கள் எல்லாம் படத்தில் வருகிறது.ஆச்சர்யமாக வால் கில்மர் ஒரு காட்சியில் வருகிறார்.இதுவரை பலமுறை பல படங்களில் பார்த்த கதை தான் ஆனால் அதை மிக மெதுவாக அழகாக சொல்லியிருக்கிறார்கள். ஆக்சன் ரசிகர்களுக்காக ஒரு மிஷன் படத்தில் வருகிறது அதை திரைக்கதையில் கொண்டு வந்த விதமும் அதை க்ளைமாக்ஸில் பயன்படுத்திய விதமும் அட்டகாசம்.
டாப் கன் பிடிச்சவங்க கண்டிப்பா பெரிய திரைல பாருங்க