வைரலாகும் குந்தவை & நந்தினி செல்பி புகைப்படம்!

 வைரலாகும் குந்தவை & நந்தினி செல்பி புகைப்படம்!

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், பிரபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலர் நடிக்க உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன் 1”.

கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது.

இப்படத்தின் ப்ரொமோஷன் பணிக்காக படக்குழு அனைவரும் மாநிலம் மாநிலமாக சென்று வருகிறது.

வரும் 30 ஆம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது இப்படம்.

மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தோடு லைகா நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

குந்தவையாக த்ரிஷாவும் நந்தினியாகவும் ஐஸ்வர்யா ராயும் நடித்திருக்கின்றனர்.

நேற்றிரவு த்ரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் ஐஸ்வர்யா ராயோடு இணைந்து எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது.

 

Related post