உடன்பிறப்பே : திரைப்படம் விமர்சனம்

 உடன்பிறப்பே : திரைப்படம் விமர்சனம்

நடிகை ஜோதிகா நடித்திருக்கும் அவரது 50வது திரைப்படம்,இயக்குனர் நடிகர்கள் சமுத்திரகனி மற்றும் சசிகுமார் இணைந்து நடித்திருக்கும் படம். படத்தின் கதை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவசால் பெரிய தலைகட்டு சசிக்குமார் அவரது தங்கையாக ஜோதிகா இருவருமே ஒரே ஊரில் இருந்தும் 15 வருடங்களாக பேசி கொள்வதில்லை அதற்கு காரணம் சசிக்குமாரின் மச்சான் சமுத்திரகனி, அவர் சட்டப்படி நடப்பவர். சசிக்குமாரோ ஊரில் தப்பு நடந்தால் அதை தட்டி கேட்கும் சண்டியர். இவரின் இந்த தன்மையால் தனது குழந்தை பாதிக்கப்படுகிறது. அதனால் ஒரு அசம்பாவிதமும் ஏற்படுகிறது.இதனால் தனது அண்ணனிடம் பேச முடியாமல் தவிக்கிறார் ஜோதிகா.இவர்களின் பகை எந்த அளவுக்கு செல்கிறது, ஜோதிகா தனது அண்ணன் சசிகுமார் இணைந்தாரா இல்லையா என்பது மீதி கதை.

படத்தின் தூணாக ஜோதிகா நடிப்பில் மிளிர்கிறார், பாச காட்சிகளில் தனது திறமையை மறுபடியும் ஒருமுறை நிரூபித்து காட்டுகிறார். சசிகுமார் வழக்கமான தனது நடிப்பில் சிறிதளவு தங்கை பாசத்தை காட்டி செல்கிறார். சமுத்திரகனி அதிகம் பேசாமல் கடைசி வரை அளவாக நடித்து அப்லாஸ் வாங்குகிறார். சூரி வழக்கம் போல் தனது காமெடியை ஆங்காங்கு தூவி செல்கிறார். கலையரசனுக்கு வில்லதனமான கதாபாத்திரம் என்றாலும் முழுமையாக செய்திருக்கிறார். D. இம்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி உள்ளது. பின்னணி இசையில் ஸ்கோர் செய்கிறார். படத்தின் ஒளிப்பதிவில் கிராமத்தின் அழகை அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.கத்துக்குட்டி என்ற படத்தை இயக்கியுள்ள இரா. சரவணன் இந்த படத்தை இயக்கியுள்ளார், படத்தின் முதுகெலும்பாக அண்ணன் தங்கை பாசத்தை வைத்து நகர்த்தி சென்று அதில் வெற்றியும் கொண்டிருக்கிறார்.குடும்பத்துடன் கண்டுகளிக்கூடிய ஒரு நல்ல திரைப்படம்,அமேசான் ப்ரையம் இல் உள்ளது.

Spread the love

Related post